சிறப்புப் பேருந்துகள்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பொங்கலுக்கு 14,104 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையுடன் இன்று நடந்த ஆலோசனைக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

10-13 தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுவரை 1.73 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும், இணையத்திலும் பேருந்துகளை முன்பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஜன.15 முதல் 19 வரை மொத்தம் 15,800 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் விழாவையொட்டி சொந்த ஊர் சென்றுவர மொத்தம் 22,676 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இரண்டு நாள்கள் ஆலோசனை நடைபெற்றது.

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும். மதுரவாயல், கோயம்பேடு சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT