தமிழ்நாடு

கே.வி. தங்கபாலுவுக்கு காமராசர் விருது: தமிழக அரசு

2024 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுவுக்கு அறிவிப்பு.

DIN

2024 ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான கே.வி. தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவரின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.

இதுகாறும் 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் கே.வி.தங்கபாலு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்.

இவ்விருது தமிழ்நாடு முதல்வரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT