விமான கட்டணம் 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையால் ராக்கெட்டில் பறந்த விமான டிக்கெட்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணம் கடும் உயர்வு

DIN

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, விமான கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், விமான டிக்கெட்டுகளை சொல்லவும் வேண்டுமோ?

ஜனவரி 14ஆம் தேதி செவ்வாயன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஏராளமானோர் வெள்ளிக்கிழமை மாலை முதலே சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் நேற்று முதல் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளூர் விமான நிலையங்களும் உள்ளன. இன்று சென்னை - மதுரைக்கு ரூ.17 ஆயிரம் வரையிலும், திருச்சிக்கு ரூ.14 ஆயிரம் வரையிலும் விமான டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.

சென்னை - கோவைக்கு ரூ.16 ஆயிரம் ஆகவும், தூத்துக்குடிக்கு ரூ.12 ஆயிரமாகவும், சேலத்துக்கு ரூ.10 ஆயிரமாகவும் விமான டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதில் பெரும் துயரம் என்னவென்றால், ஏற்கனவே சென்னையிலிருந்து சேலம், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கேரளம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களின் டிக்கெட் விலைகளும் உயர்ந்திருப்பதுதான் சோகத்திலும் சோகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT