முகப்பு
தமிழ்நாடு

அரசியலமைப்பை அவமதித்துவிட்டார் முதல்வர்: ஆளுநர் மாளிகை

தேசிய கீதம் விவகாரத்தில் அரசியலமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டார் என்று ஆளுநர் மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 12 ஜனவரி, 2025 at 10:32 AM
ஆளுநர் ஆர்.என்.ரவி-முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

தேசிய கீதம் விவகாரத்தில் அரசியலமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டார் என்று ஆளுநர் மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.

மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.

பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜன. 6ஆம் தேதி கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் உடனே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூற, அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபட்டார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.