தமிழ்நாடு

ஜன.15 நெட் தேர்வு நடைபெறாது - யுஜிசி அறிவிப்பு

மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு...

DIN

மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவால் (யுஜிசி) உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான ‘நெட்’ தேர்வு, தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) கணினி வழியில் கடந்த 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஜன.15-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மாற்று தேதியில் நடத்தப்படுமென்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்துள்ளது.

ஜன. 16-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வு, எவ்வித மாற்றமுமின்றி அதே தேதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

SCROLL FOR NEXT