முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து குறைந்தது

Updated On : 16 ஜனவரி, 2025 at 3:19 AM
மேட்டூர் அணை நீர்வரத்து
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 381 கன அடியிலிருந்து வினாடிக்கு 254 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் இருப்பு 83.98 டிஎம்சியாக உள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நேற்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →