கோப்புப் படம் 
தமிழ்நாடு

கரூர்: போக்ஸோவில் காவலர் கைது!

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததால், போக்ஸோ சட்டத்தின்கீழ் காவலர் இளவரசன் கைது

DIN

கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.

கரூர் அடுத்த நெரூர் ரங்கநாதன் பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காவலர் இளவரசனுக்கும் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவிக்கு காவலர் இளவரசன் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து, காவலர் இளவரசனை சனிக்கிழமை அதிகாலை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT