சென்னையில் தனியார் மினி பேருந்துகள்!
சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பற்றி...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்கிக் கொள்ள தமிழக போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெருநகர போக்குவரத்துக் கழகத்தின்(எம்டிசி) பேருந்துகளும், குறுகிய பகுதிகளுக்கு மினி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரப் பகுதிக்குள் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி பெற்ற சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க : மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?
இந்த நிலையில், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் பிப்ரவரி மாதம்முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே பெருநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதல் சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.