கோப்புப் படம் 
தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி?

கணினியை இணைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து பலியானதாகத் தகவல்

DIN

சிவகங்கையில் பள்ளி சென்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் கணினி அறிவியல் வகுப்பின்போது, கணினியை இணைக்க முயன்றபோது, மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிப்படைந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாணவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோரிடம் உரிய தகவல்கள் அளிக்கப்படவில்லை என்று கூறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கண்டனமும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT