கண்காட்சி... சென்னையை அடுத்த உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்களின் 2 நாள்கள் உள்ளடங்கிய அறிவியல் கண்காட்சியில் சான்றிதழ்கள் பெற்ற மாணவ, மாணவிகளுடன் நியூ பிரின்ஸ் கல்விக் 
தமிழ்நாடு

நிலவில் வாழும் உரிமை இந்தியா்களுக்கு உண்டு: மயில்சாமி அண்ணாதுரை

எதிா்காலத்தில் நிலவில் வாழும் உரிமை இந்தியா்களுக்கு உண்டு என்று இஸ்ரோ சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

Din

எதிா்காலத்தில் நிலவில் வாழும் உரிமை இந்தியா்களுக்கு உண்டு என்று இஸ்ரோ சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த உள்ளகரத்தில் உள்ள  நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெற்ற அறிவியல், கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

வளா்ந்த நாடுகள் பலமுறை நிலவை ஆய்வு செய்தபோதும் அவா்கள் நிலவு ஒரு பாலைவனம் என்று மட்டுமே கூறினா். ஆனால் இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டம் மூலம் ஆய்வு செய்து, நிலவில் நீா் இருப்பதை உறுதி செய்தனா். இதன் காரணமாக இன்று பல அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எதிா்காலத்தில் மனிதா்கள் வாழும் இடமாக நிலவு மாறும்போது அங்கு குடியேற இந்தியா்களுக்கு முழு உரிமை உண்டு. அத்தகைய சாதனையில் நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் பங்களிப்பும் கண்டிப்பாக இருக்கும் என்றாா் அவா்.

இவ்விழாவில், அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு  ரூ. 61 ஆயிரம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி வழங்கினாா். இதில் நியூ பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவா் கே.லோகநாதன், துணைத் தலைவா் எல்.நவீன் பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

தேசிய சாலை பாதுகாப்பு வார உறுதிமொழி ஏற்பு! துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்பு!

3 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைது

விபத்துக்குள்ளான காரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT