ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர்.  
தமிழ்நாடு

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

அறிக்கை அடிப்படையில் திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN

அறிக்கை அடிப்படையில் திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , கால்நடை , மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்குபெற்று ஐஐடி உள்ளிட்ட 5 குழுவினர் சார்பில் கடல் அரிப்பை தடுப்பது குறித்து காணொலி காட்சியில் இணைந்து வழங்கிய பரிந்துரைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,

18.1.25 ல் நேரில் சென்று ஆய்வு நடத்தி 5 குழுவினரிடம் கடல் அரிப்பை தடுப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வுப் பணியை ஒப்படைத்தோம்.

இன்று காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று அந்த குழுவினர் தங்கள் அறிக்கையை வழங்கினர்.

3 பேரது அறிக்கைகள் ஒன்றாக உள்ளன. 2 பேரின் அறிக்கைகளில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

எனவே இன்று அல்லது நாளைக்குள் இறுதி அறிக்கையை அவர்கள் 5 தரப்பும் இணைந்து வழங்குவர்.

திங்கள் அல்லது செவ்வாய்க்குள் அறிக்கை பெற்று அதன்படி ஒப்பந்தம் வழங்கி கடல் அரிப்பை தடுக்கும் பணிகளை தொடங்குவோம்.

உரிய தடுப்பு நடவடிக்கை எடுத்தபின் திருச்செந்தூர் கடலில் இறங்கி நீராடுவது போன்ற அனைத்து வழிபாட்டு முறைகளும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருச்செந்தூர் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செந்தூர் கோயில் பாதுகாப்புக்காக 19 கோடியளவிலான கோயில் நிதியை மீன்வளத்துறைக்கு வழங்கி 65 சதவீத பணிகள் நிறவடைந்துள்ளன. கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் பாதிக்காத வகையிலும் தேவையான நடவடிக்கை தனியாக மேற்கொள்ளப்படும்.

திருச்செந்தூர் கோயிலுக்கு தைப் பூசத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடல் அரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் .

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு

முன்பெல்லாம் தமிழக பக்தர்கள் அண்டை மாநில கோயில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்த அதிகமாக செல்வார்கள் .

தற்போது அண்டை மாநிலத்தவர்கள் நேர்த்திக் கடன் செலுத்த தமிழக கோயில்களுக்கு அதிகமாக வருகின்றனர்.

பழனி , திருச்செந்தூர் , திருத்தணி , திருவண்ணாமலை போன்ற கோயில்களுக்கு வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். சில கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அனைத்து கோயில்களிலும் கட்டணமில்லா தரிசனமே தமிழக அரசின் நோக்கம். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையை சில மதவாத அமைப்பினர் ஊதி பெரிதாக்குகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT