சுதா சேஷய்யன்  
தமிழ்நாடு

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சை பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கல்விச் சிந்தனை அரங்கில் சுதா சேஷய்யன் பற்றி...

DIN

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சை பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27) காலை தொடங்கியது.

இந்த நிகழ்வில் ’வளர்ந்த இந்தியா 2047-ல் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சிவபிரசாத் ஆகியோர் உரையாற்றினர்.

சுதா சேஷய்யன் பேசியதாவது:

“ஒரு நோயாளிக்கு 30 மருத்துவர்களோ 30 பயிற்சியாளர்களோ இருக்க முடியாது; பொது மருத்துவம், குடும்ப மருத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிப்படை விஷயங்களில் குறைபாடு இருப்பது தற்போது எனக்கு புரிந்துள்ளது.

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. குடும்ப மருத்துவ முறையை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்.

மருத்துவத்தில் செய்முறை மற்றும் அனுபவக் கற்றல் முறை தேவை” என்றார்.

சிவபிரசாத் பேசியதாவது:

“தற்போதைய காலகட்டத்தில், வேலை தேடுபவர்கள் குறைந்த வேலைக்கு அதிக ஊதியம் விரும்புகிறார்கள். இதனிடையே, முதலாளிகள் வாரத்தில் 90 மணிநேர வேலை வாங்க விரும்புகிறார்கள்.

இந்த இடைவெளியையும் பொருத்தமின்மையையும் நிரப்புவது ஆசிரியர்களின் பொறுப்பாகும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT