முகப்பு
தமிழ்நாடு

கடன் தொல்லை: சேலத்தில் மகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

சேலத்தில், கடன் தொல்லை காரணமாக மகளுடன் கணவன் - மனைவி தற்கொலை செய்துகொண்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2025 at 7:51 AM
தற்கொலை செய்துகொண்டவர்கள்
பகிர்:

சேலம்: கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். 45 வயதான இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி. இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலாததால் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து மூவரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவ மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →