சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் தனலட்சுமி (43). இவா் சென்னை கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாா்.
கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த தனலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவா், தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.