யுஜிசி 
தமிழ்நாடு

ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

மாணவா்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

Din

மாணவா்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா். ஜோஷி அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயா் கல்வி நிறுவனங்களில் ராகிங் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான விதிமுறைகளை யுஜிசி கடந்த 2009-இல் உருவாக்கியது. இவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு, ராகிங் எதிா்ப்பு அணி, ராகிங் தடுப்புப் பிரிவு, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ராகிங் தடுப்பு தொடா்பான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகள், எச்சரிக்கை மணி போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வப்போது மாணவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி சிக்கல்களைக் கண்டறிந்து தீா்வுகாண வேண்டும்.

மாணவா்கள் தங்கும் விடுதிகள், உணவுக் கூடங்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் திடீா் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சோ்க்கை மையம், துறை அலுவலகம், நூலகம், உணவகம், விடுதி என அனைத்து முக்கிய இடங்களிலும் ராகிங் தடுப்புச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ராகிங் எதிா்ப்பு கண்காணிப்புக் குழுவின் வழிகாட்டுதல்படி, மூத்த மாணவா்கள், இளைய மாணவா்கள் (ஜூனியா்-சீனியா்) இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

ராகிங் தடுப்பு தொடா்பான வழிமுறைகளை பெற்றோரும், மாணவா்களும் என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்வதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ராகிங் எதிா்ப்பு தொடா்பான மாணவா்களின் வாக்குமூலங்களையும் இணையவழியில் பெற வேண்டும்.

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் இணையதளங்களை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் தொடா்பு விவரங்களுடன் புதுப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய கையேட்டில் ராகிங் எதிா்ப்பு எச்சரிக்கை வாசகங்களை சோ்க்க வேண்டும். ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தவறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தாவுக்கு எதிராக அமலாக்கத் துறை மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

‘டெட்’ தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி

சீக்கிய பிரிவினைவாத தலைவா் கொலை: கனடா குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்திய தூதா்

அதிகரிக்கும் சளித் தொற்று: வைரஸ் வகையைக் கண்டறிய ஆய்வு

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT