முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

Updated On : 3 ஜூலை, 2025 at 11:35 AM
மேட்டூர் அணை
பகிர்:

சேலம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது.

அணையின் நீர்வரத்துக் குறைந்து, அதனை விட அதிகளவில் நீர் திறப்பு இருப்பதால், அணையின் நீர்மட்டமும் குறைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக, வினாடிக்கு 22,300 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,700 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.91 அடியிலிருந்து 119.80 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.15 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →