காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார் 
தமிழ்நாடு

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Din

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் காவலராகப் பணியாற்றியவா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலா்கள் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளாா்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி பேச்சு!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT