போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த்தை ஜூலை 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதேபோல, இதே வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இருவருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜாமீன் மனுக்கள் மீது இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.