அன்னவாசல் அருகே தீடீரென்று செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ளது வயலோகம். இங்குள்ள பெரிய குளத்தை சுற்றி ஆள் உயரத்துக்கு செடி,கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவு வளர்ந்து நின்ற செடி, கொடிகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நிகழ்விடத்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
உடனடி செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிக்க: திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.