எடப்பாடி பழனிசாமி பேச்சு  படம் - அதிமுக / யூடியூப்
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் 52% வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், தேர்தலையொட்டிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சாலை பவனியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.

அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு முடக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

''அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக அமைப்பது. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். மேலும், பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நியாபக மறதியா? 1999-ல் பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்திற்காக திமுக எதையும் செய்யவில்லை.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு

கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதுவரை 52% வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பொதுவெளியில் பெண்கள் நடமாடக் கூட முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

அஜித் குமார் என்ற இளைஞரை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

மத்தியில் வலுவான ஆட்சியை நாங்கள் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றியுள்ளீர்கள்?. தீய சக்தியான திமுக வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும்.

அம்மா மினி கிளினிக் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையும் படிக்க | தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்

Opposition Leader Edappadi Palaniswami has alleged that electricity tariffs have been increased by up to 52 percent under the DMK regime.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை இன்று குறைந்தது!

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT