ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு இன்டர் லாக்கிங் வசதி இல்லாததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது.
இந்த விபத்தில், திராவிட மணி மகள் சாருமதி, விஜயசந்திரகுமார் மகன் விமலேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கேட் கீப்பர் அலட்சியாமாக செயல்பட்டு தூங்கியதே விபத்துக்கு காரணம் எனக் கூறி பொது மக்கள் சரமாரியான தாக்குதல் நடத்தினர்.
மேலும், செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செம்மங்குப்பத்தில் இன்டர் லாக்கிங் வசதி இல்லாததுதான் விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மனித தவறுகள் மற்றும் விபத்துளைத் தவிர்க்கவும், இன்டர் லாக்கிங் வசதி செயல்படுத்தப்படுகிறது. இது, பாயின்டுகள், சிக்னல்களை சரியாக இயக்க உதவுகிறது.
கேட் திறந்திருந்தால் 1 கி.மீ. முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். சிக்னலை பார்த்து ஓட்டுநர் ரயிலை நிறுத்துவார், இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.
இந்த இன்டர் லாக்கிங் வசதி இல்லாததால், ரயில்வே கேட் திறந்து இருப்பது ரயில் ஓட்டுநரால் அறியமுடியவில்லை, இதனால் ரயிலை நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் அனைத்து லெவல் கிராசிங்கில் உள்ள ரயில்வே கேட்டில் இண்டர் லாக்கிங் வசதி அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.