திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையைக் கண்டித்து வருகிற ஜூலை 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை நகராட்சி அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு காரணமான மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை உள்ளிட்ட இதர அரசு துறைகளைக் கண்டித்தும் அரசுத் துறைகளின் நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.