அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

அறநிலையத் துறையின் நிதி மாணவர்களுக்கு கிடைக்காது! இபிஎஸ் விளக்கம்!

அறநிலையத் துறையின் நிதியில் கல்லூரிகள் அமைக்கப்பட்டால், மாணவர்களுக்கான முழு நிதியும் கிடைக்காது என்று அதிமுக விளக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

அறநிலையத் துறையின் நிதியில் கல்லூரிகள் கட்டப்படுவதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதாகக் திமுகவினர் விமர்சித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அறநிலையத் துறையில் இருந்து நிதி தரவேண்டாம் என்று கூறவில்லை. அவ்வாறு செய்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினேன்.

அறநிலையத் துறையின் நிதியின் மூலம் கல்லூரிகள் அமைக்கப்பட்டால், மாணவர்களுக்கு உரிய முழு நிதியும் கிடைக்காது என்பதை திரித்து, அதன்மேல் கண், காது, மூக்கு வைத்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், 4 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. ஏழைகளின் மருத்துவர் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியது. உங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா?

41 உறுப்புக் கல்லூரியாக இருந்தவற்றை, அரசுக் கல்லூரிகளாக மாற்றியது அதிமுக ஆட்சியில்தான்.

முதுநிலை பட்டப்படிப்புக்கான வகுப்புகளைத் தொடங்காவிட்டால், சி.வி. சண்முகம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

EPS speech on temple fund for collages

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

சீன அதிபருடன் பயனுள்ள சந்திப்பு! -பிரதமர் மோடி

நச்... கங்கனா சர்மா!

சென்னையில் Gaming திருவிழா! | Chennai Trade Center | Gamer's Hub | BGMI | PUBG | FIFA | REDBULL

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

SCROLL FOR NEXT