அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ENS
தமிழ்நாடு

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்...

இணையதளச் செய்திப் பிரிவு

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பதிலளித்த அமித் ஷா, 'தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆட்சியில் பாஜக பங்கு பெறும்' என்று கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே என்று அதிமுகவினர் கூறிவரும் நிலையில், ஆட்சியிலும் இருப்போம் என்று பாஜகவினர் கூறிவந்தனர். தற்போது அமித் ஷாவும் இதனை உறுதி செய்யும்விதமாக இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

"நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என்று கூறியுள்ளார்.

அமித் ஷாவின் கருத்தும் எடப்பாடி பழனிசாமியின் பதிலும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் குழப்பத்தில் இருக்கின்றன.

AIADMK General Secretary Edappadi Palaniswami has said that the his party will form a government alone with a majority in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

தங்கம் விலை உயர்வு!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

SCROLL FOR NEXT