மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினரைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று(ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பும் கோரியிருந்த நிலையில், சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகையுடன் நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவினர் குவிந்துள்ளனர்.அதிகளவிலான காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு வெடிக்கக் கூடாது, இருசக்கர வாகன ஊர்வலம் கூடாது உள்பட 16 நிபந்தனைகளுடன் தவெக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து, ”சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்ற பதாகையை ஏந்தியபடி கலந்துகொண்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
காவல் நிலைய மரண வழக்கில் அஜித்குமார் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதுபோல, 24 குடும்பத்தினரிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.