தமிழகத்தில் 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றி...
தமிழகத்தில் 40 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரக் காவல்துறையின் எம்கேபி நகர் சரக காவல்துறை உதவி ஆணையராக உள்ள மணிவண்ணன் மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவுள்ள காவ்யா, மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கோவை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சேலம் காவல் உதவி ஆணையர் செல்வம், தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பண்டாரசாமி, சென்னை திருமங்கலம் உதவி ஆணையர் பிரம்மானந்தன் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
DGP Shankar Jiwal has ordered the transfer of 40 Deputy Superintendents of Police in Tamil Nadu.
இதையும் படிக்க : கணவரைப் பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.