திருவள்ளூர் அருகே ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, இரு தண்டவாளங்களிலும் மின்சார ரயில்கள் 10 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.
இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. இதற்கிடையே 3 தண்டவாளங்களிலும் டேங்கர்கள் தடம்புரண்டததால், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே துறையினர், பணியாளர்கள் இரவு முழுவதும் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, தடம் புரண்ட டேங்கர்கள் ராட்சத கிரேன் மூலம் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, சேதமடைந்த தண்டவாளம் மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 2 தண்டவாளங்களில் சிறிது சேதம் அடைந்த பகுதியில் சிமெண்ட் சிலாப்கள் பதித்து சமப்படுத்தி சரி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அந்த 2 தண்டவாளங்களில் 10 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் மாலைக்குள் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.