முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 15 ஜூலை, 2025 at 11:54 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 15) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 6 districts, including Chennai, for the next 2 hours.

முழு கட்டுரையைப் படிக்க →