யோகா (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

யோகா- இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2025-2026-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு; அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

பி.என்.ஒய்.எஸ். பட்டபடிப்புக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்புப் பிரிவு : பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்பு (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)

படிப்பிற்கான காலம் : 5½ ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2;

கல்லூரிகளின் விவரங்கள்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02, சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-17.

சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் ஒதுக்கீட்டு விவரங்கள்: அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 01.08.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Indian Medical and Homeopathic Council has announced the admission notification for the Yoga and Naturopathy degree course.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

SCROLL FOR NEXT