காஞ்சிபுரத்தில் மழை 
தமிழ்நாடு

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம், சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று பலத்த குறைக்காற்றுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இருப்பினும் காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மாலை 4 மணியளவில் திடீரென மேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

மெல்ல மெல்ல சாரல் மழையுடன் துவங்கிய நிலையில் திடீரென சூறைக்காற்று வீசத் துவங்கி பலத்த மழை பெய்தது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் சாலையில் திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகினர். தொடர்ந்து 45 நிமிடத்துக்கும் மேல் பலத்த மழை பெய்ததால் சாலை முழுவதும் நீர் வழிந்து ஓடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

“செங்கோட்டையன் முயற்சிக்கு முழு ஆதரவு” O. Panneerselvam பேட்டி | ADMK | EPS

SCROLL FOR NEXT