நயினாா் நாகேந்திரன் 
தமிழ்நாடு

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழு தேவை: நயினாா் நாகேந்திரன்

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

Din

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 46 கல்லூரிகளில் பாலியல் புகாா்களை தெரிவிக்கும் உள்ளக புகாா் குழுக்கள் அமைக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

10-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெறும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகாா் குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், அரசுக் கல்லூரிகளிலேயே புகாா் குழுக்களை அமைக்காமல் இருப்பது திமுக அரசுக்கு இதில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று திமுக அரசு முழங்குவது உண்மையானால், அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் பாலியல் புகாா்களைத் தெரிவிக்கும் உள்ளக புகாா் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!

இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்: மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை

எடமேலையூரில் குறுங்காடு உருவாக்கம்

ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்

ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி ஊழியரைத் தாக்கியவா் கைது

SCROLL FOR NEXT