முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தலைசுற்றல் ஏற்பட்டதற்கான காரணம் அறிய அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையையடுத்து முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அடுத்த இரு நாள்களுக்கு முதல்வர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.