நடிகை விஜயலக்‌ஷ்மி 
தமிழ்நாடு

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலட்சுமி திட்டவட்டம்

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை - நடிகை விஜயலட்சுமி

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை என்று நடிகை விஜயலட்சுமி நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சீமானுடன் பேசி தீர்வு காண தயாராக இல்லை என்றும் விஜயலட்சுமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் புலன் விசாரணை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய விஜயலட்சுமி தரப்ப்புக்கு 4 வாரம் கால அவகாசமும் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ல நிலையில், சீமானின் மேல்முறையீட்டு மனு மீதான முந்தைய விசாரணைகளின்போது, தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தன் மீது மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும், புகாரளித்த நடிகை(விஜயலட்சுமி) இதற்கு முன் 3 முறை புகாரை திரும்பப் பெற்றுள்ளார் என்றும் சீமான் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ‘தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கை சட்டப்படி எதிா்கொள்வேன். இதில் சமரச உடன்பாடு செய்து கொள்ள இடமில்லை’ என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை: நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஷீ மிஸ் பியூட்டி விழாவில்... தமிழ்ச் செல்வி!

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் காலமானார்!

பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை பேரா?

நாட்டின் பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!

SCROLL FOR NEXT