தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மாணவர் சேர்க்கை 3 இலட்சத்து 94 ஆயிரம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.