திருச்சியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
அங்கு சாலை வலம் மேற்கொள்ளும் அவர், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார். ராஜேந்திர சோழனின் நாணயத்தை வெளியிட்டு பிறகு கண்காட்சியையும் பார்வையிடவுள்ளார்.
முன்னதாக சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை சாலைப்பேரணியிலும் ஈடுபடவுள்ளார்.
திருச்சியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் முற்பகல் 11.50 மணிக்கு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் வருகிறாா். அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறாா். நண்பகல் 12 மணியளவில் பெருவுடையாா் கோயிலை வந்தடைகிறாா்.
பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் பாஜக தொண்டர்கள், அதிமுக தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல முறை தமிழ்நாட்டிற்கு வந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்துள்ளார்.
நரேந்திர மோடியின் வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | முதலாம் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் இன்று வெளியீடு!
Prime Minister Narendra Modi left for Gangaikonda Cholapuram from Trichy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.