பிரேமலதா  
தமிழ்நாடு

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்.

அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை.

அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது.

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம். 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

அதிமுகவின் அறிவிப்பு தேர்தலையொட்டி அமைந்திருப்பது போல், எங்களது முடிவும் தேர்தலையொட்டியே இருக்கும்.

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கூட்டணியில் தேமுதிக தொடரும் என அதிமுக கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அவர்களிடம்தான் கேட்க வேண்டு என்றார். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது என கே.பி.முனுசாமி கூறியநிலையில் பிரேமலதா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT