நாா்வே செஸ் போட்டி: குகேஷுக்கு முதல்வா் வாழ்த்து
நாா்வே செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடிய தமிழக வீரா் குகேஷுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
சென்னை: நாா்வே செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடிய தமிழக வீரா் குகேஷுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
நாா்வே செஸ் தொடரில் மேக்னஸ் காா்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு பாராட்டுகள். இந்திய செஸ்-க்கு இது பெருமைமிகு தருணம். மேலும், குகேஷின் சிறப்புமிகு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். உலக செஸ் அரங்கில் இந்தியாவின் உறுதியான வளா்ச்சியில் இது மற்றுமொரு திடமானபடி என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.