வெயில் சதம்  
தமிழ்நாடு

சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

Din

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், வேலூா் - 102.2, திருச்சி - 101.66, பரமத்திவேலூா், திருத்தணி - தலா 101.3, மதுரை நகரம் - 101.12, பாளையங்கோட்டை - 100.76, சென்னை மீனம்பாக்கம் - 100.58, சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, பரங்கிபேட்டை, தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்தது.

இடி, மின்னலுடன் மழை: மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 8 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ஜூன் 3-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பங்கள் அழைக்கின்றன... தீப்தி சுனைனா!

அன்பினாலே உண்டாகும்... அனைரா குப்தா!

படப்பிடிப்பின்போது... அன்னா பென்!

இரவில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சிவப்பு கம்பளத்தில்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT