அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) ENS
தமிழ்நாடு

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்: அமைச்சர் தகவல்

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரம் இல்லை என்பதால் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்தி நகரில் ரூ.18.41 கோடி மதிப்பில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, அமைச்சர் அன்பில் மகேஸ் இணைந்து திறந்துவைத்தனர்.

"நவீன கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு இணையாக இப்பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான கற்றல் சூழலில் பயிலவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கற்பிக்கவுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

பள்ளி கட்டிட திறப்பு நிகழ்ச்சியை பெரும் விழாவாக ஒருங்கிணைத்த மாநகராட்சி அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், ஊர் மக்களுக்கும் நன்றிகள்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கிய நிலையில் பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம் ஏறுதல் நிகழ்வை நடத்திக்காட்டினர்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,

"தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம் செய்திகள்: சில வரிகளில் 1.8.25 | NewsWrap

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

SCROLL FOR NEXT