பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துவது பற்றி...

DIN

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி வருகிறார். இதனிடையே, கட்சிக்கு நான்தான் தலைவர் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் ஏற்பாட்டின் பேரில் தைலாபுரத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே இன்று காலை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி, அன்புமணியின் மகள் சஞ்சுத்ரா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுமார் ஒரு மணிநேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தைலாபுரத்தில் இருந்து அன்புமணி புறப்பட்டுச் சென்ற நிலையில், தற்போது ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT