முகப்பு
தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

Updated On : 6 ஜூன், 2025 at 10:32 AM
அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.
பகிர்:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உறுப்பினா்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.தனபால் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள், கமல் வேட்புமனு தாக்கல்

அவா்களின் வேட்புமனுவில் தலா 10 அதிமுக எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை கையொப்பமிட்டனா்.

இவா்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அலுவலகத்தில் வேட்புமனுக்களை வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →