ஏ.ஆர்.ரஹ்மான் கோப்புப்படம்
தமிழ்நாடு

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு.

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ரூ. 10,000-க்கு டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் மாதம் 12 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. தொடர் மழை காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ஏராளமானோா் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் நுழைவுச்சீட்டு இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பினர்.

இதற்கு, நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து, நிகழ்ச்சியை காணாதவா்களுக்கு நுழைவுக் கட்டணத்தைத் திருப்பி அளித்தது.

இந்த நிலையில் வாகன நிறுத்தத்துடன் சேர்த்து ரூ. 10,000 டிக்கெட் எடுத்திருந்த அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டபோது முறையாக திட்டமிடாததாலும் செப்டம்பர் மாதம் நடைபெற்றபோது போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததாலும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு கோரியும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி தரக்கோரியும் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்தப் புகாரை விசாரணை செய்த ஆணையம், நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவெண்ட்ஸ் நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடாகவும், ரூ. 5000 வழக்கு செலவாகவும் மொத்தம் ரூ. 55,000-த்தை மனு தாரருக்கு இரண்டு மாதங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT