தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. 
தமிழ்நாடு

ஹால் ஆஃப் ஃபேம்: தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து...

DIN

ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் மகேந்திர சிங் தோனி சேர்க்கப்பட்டதற்காக அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் நேற்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.

அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:

ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐ.பி.எல். கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.

உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள்! விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள்! ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள்.

உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே 'Thala For a Reason' என்ற புகழுரை ஓயாது; என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

SCROLL FOR NEXT