சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை(ஜூன் 14) அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ்(100.76 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் சுட்டெரித்தது.
அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையம்(37.5 டிகிரி செல்சியஸ்), வேலூர்(37.4 டிகிரி செல்சியஸ்), தஞ்சாவூர்(37 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.