பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சி; ஆனால் இபிஎஸ்தான் முதல்வர்! - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...

DIN

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

"தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி, கூட்டணி கட்சிகளின் ஆட்சி. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.

தேமுதிகவும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போதுதான் திமுகவை வெற்றி பெற முடியும். அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும்.

மத்திய அரசு நிதிகளை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அது எந்த திட்டமாக இருந்தாலும் சரி, மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்திவிட்டு, தாங்களே செய்ததாகக் கூறுகிறார் முதல்வர். தமிழக அரசின் திட்டங்களில் 70% மத்திய அரசின் நிதிதான்.

திமுகவினர் தமிழ், தமிழ் பண்பாட்டை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழ், தமிழ் பண்பாட்டை வைத்து அரசியல் செய்வது இந்த காலத்தில் எடுபடாது; பண்டைய கால செயல் முறை இப்போது எடுபடாது.

கீழடியைப் பொருத்தவரை ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்பட்டுள்ளது. அவ்வளவுதானே தவிர, அதை வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், சரஸ்வதி நதி பற்றி பேசுகிறார். அவர் எப்போதுமே தமிழக மக்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறி தமிழ்நாட்டிற்கு, தமிழுக்கு தொண்டு செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களது ஆட்சியை கொண்டுவருவதுதான் வழக்கமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் நிச்சயமாக அது எடுபடாது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT