ENS
தமிழ்நாடு

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையில் சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பெண் புகார்

DIN

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வரும் திவ்யா (35) என்ற பெண், அவரது தந்தை சர்குணனின் வளர்ப்பு தாயார் பழனியம்மாளுக்கு சொந்தமாக செல்வபுரம், குமாரபாளையம் கிராமத்தில் உள்ள 36 சென்ட் நிலம், உயில் சாசனம் மூலம் தந்தைக்கு வந்ததாகவும், கடந்த பல வருடங்களாக சொத்தை தந்தையின் குடும்பத்தினர் அனுபவித்து வருவதாகவும், புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலத்தை அபகரிக்க தீபா விஸ்வநாதன், ஈஸ்வரி, ரேணுகா, ராணி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு உள்ளதாகவும், கடந்த ஏப்ரல் 15 ம் தேதி, ஜேசிபி, டிராக்டர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி உள்ளார்.

மேலும் அவரை ஜேசிபியால் மோதுவோம் என மிரட்டியதாகவும், 30 வயதுடைய நான்கு ஆண்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல் துறைக்கு தகவல் அளித்த பின்பும் அவர்கள் இடத்தை விட்டு செல்லவில்லை என திவ்யா தெரிவித்து உள்ளார்.

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மீண்டும் அவர்கள் அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையரிடம் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், தீபா விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை விடுத்து உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT