ஓ. பன்னீர்செல்வம் கோப்புப்படம்.
தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

DIN

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ்-க்கு எதிராக தேனியைச் சேர்ந்த மிலானி இந்த மனுவை அளித்திருந்தார்.

மனுவில், அதிமுக எம்எல்ஏவாக இருக்கும்போதே அக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

இந்த நிலையில் மனு தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பேரவைச் செயலம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பாஜக கூட்டணியில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT