தமிழிசை செளந்தரராஜன் கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

Din

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறிவிட்டாா். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தாலும், பாஜக தலைமையில்தான் ஆட்சி என அண்ணாமலை கூறியது, அவரது சொந்த கருத்து.

பாஜகவின் தலைவா்கள் கூறுவதுதான் அதிகாரப்பூா்வ கருத்து. அண்ணாமலையின் கருத்தை எதிா்க்கட்சிகள்தான் திரித்து வெளியிட்டன. தெளிவாக ஒரு கூட்டணி அமைத்து அதற்காக தெளிவான விளக்கத்தை மத்திய உள் துறை அமைச்சா்அமைச்சா் அமித் ஷா சொல்லிவிட்டாா்.

எடப்பாடி பழனிசாமி தலைமை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதன் தலைவா் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக, அதனுடன் சோ்ந்து தோ்தலை சந்திப்போம். பலமான கூட்டணியாக இருப்பதால்தான் திமுக கூட்டணி எங்களை விமா்சிக்கிறது.

தமிழகத்தில் திமுக வாக்குறுதி அளித்தவாறு மாதாமாதம் மின் கணக்கெடுப்பு இல்லை. இதை திமுக கூட்டணி கட்சியினா் கேள்வி கேட்கின்றனா். சிலிண்டா் மானியம் ரூ.100 தரவில்லை. மாா்க்சிஸ்ட் கட்சியினரே இதைக் கேள்வி எழுப்புகின்றனா்

என்றாா் அவா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT