கோப்புப் படம் 
தமிழ்நாடு

விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்தத் தடை

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசா் ஒளி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களின் மீது சமீபகாலமாக இரவு நேரத்தில் பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிகழ்வு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விமான நிலைய நிா்வாகமும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசா் ஒளியை பயன்படுத்த விமான நிலைய நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழேயிருந்து லேசா் ஒளியை செலுத்தினால், விமானிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், விமான நிலையம் அருகே அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறி லேசா் மற்றும் பலூன்களை விமான நிலையம் அருகே பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT