சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி ENS
தமிழ்நாடு

மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து பற்றி...

DIN

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி இரவு, ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ராட்சத கிர்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (43) என்பவர் உயிரிழந்தார்.

சென்னையின் பல்வேறு இடங்களில் சில ஆண்டுகளாக மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அவ்வாறு இருக்க மெட்ரோ பணியால் ஒருவர் உயிரிழந்தது மக்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்தினருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ. 5 லட்சமும் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல்&டி நிறுவனம் ரூ. 20 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட மெட்ரோ ரயில் நிர்வாகம், பணியின்போது அலட்சியமாக இருந்த 4 பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

மேலும் ஒப்பந்த நிறுவனமான எல்&டி நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை ஏற்கிறாா் ராகுல்!

தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்

5 ஆண்டுகளில் 667 புலிகள் இறப்பு - மகாராஷ்டிரத்தில் அதிகம்

SCROLL FOR NEXT